![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/08/MS-Dhoni-Celebration-CSK-Victory-With-Gym-mates-Photo-Credit-Twitter-380x214.jpg)
ஆகஸ்ட் 26, ராஞ்சி (Cricket News): நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல் 2023 தொடரில், இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியினர் இடையே கடுமையான பலப்பரீட்சை நடந்தது. இந்த ஆட்டம் கடந்த 29 மே அன்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. மறுமுனையில் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியபோது மழை குறுக்கிட்டது.
முன்னதாக மழையின் காரணமாக போட்டிகள் ஒருநாள் தள்ளிப்போன நிலையில், பல மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு சென்ற ரசிகர்கள் பலரும் கிடைத்த இடங்களில் தங்கி இருந்தனர். மறுநாள் நடைபெற்ற ஆட்டத்திலும் மழை நடுவே குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு 15 ஓவர்கள் ஆட்டம் வழங்கப்பட்டது. Sunny Leone: கவர் பிக்-க்கு கட்டையை பிடித்து போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்.. பரபரக்கும் ரசிகர்கள்.!
இந்த ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி தனது இலக்கான 171 ரன்களை 15 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ஜடேஜாவின் மகிமையால் இறுதியில் பந்துகள் மைதானத்தை பதம்பார்த்து வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியை அன்று இந்தியாவும், உலகளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடினர்.
ரவீந்திர ஜடேஜா உட்பட சி.எஸ்.கே அணியினர் கொண்டாட்டத்தில் திளைத்தனர். மகேந்திர சிங் தோனி வெற்றிக்கோப்பையை தனது அணியினருக்கு சமர்ப்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றிகொண்டாட்டம் இன்று வரை தொடருகிறது. தோனி தனது ஜிம்மில் நண்பர்களுடன் சி.எஸ்.கே வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார். இது சி.எஸ்.கே-வின் ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Never ending celebration for the 5th IPL championship 🥳
Thala Dhoni celebrating the victory with his gym buddies 💛#MSDhoni #WhistlePodu
🎥Sumeet Kumar Bajaj pic.twitter.com/EVPvCoGi91
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) August 25, 2023