நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் (Photo Credit: Twitter)

மே 29, அகமதாபாத் (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் (Narendra Modi Stadium) மைதானத்தில், நேற்று (28-05-2023) அன்று ஐபிஎல் 2023 தொடரின் இறுதி ஆட்டம் நடைபெறவிருந்தது.

இரவு 07:30 மணிக்கு ஐ.பி.எல் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேலையில், மழையின் காரணமாக தொடர் தாமதம் ஏற்பட்டது. கனமழை பெய்த காரணத்தால், நேற்றைய போட்டி நடைபெறாமல் போனது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans) அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (29-05-2023) இரவு 07:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை குறுக்கிட்டால் இறுதி முடிவை நடுவர் எடுப்பார்கள்.

நரேந்திர மோடி விளையாட்டு மைதானம், அகமதாபாத் (Photo Credit: Twitter)

கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்க்க டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தங்களின் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும், இன்று அதனை பயன்படுத்தி போட்டியை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் அகமதாபாத்தின் வானிலையை பொறுத்தமட்டில் மழைக்கு இன்று வாய்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கையின் ஆட்டத்தில் எதுவும் நிர்ணயிக்க இயலாதது. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் பேட்டிங் சாம்பவான்களுக்கு சிறந்தது என்பதால் ஆட்டம் சூடேறியுள்ளது‌.

ஐ.பி.எல் 2023 தொடரின் புள்ளி பட்டியலை பொறுத்தமட்டில் சென்னை அணி 14 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருக்கிறது.