ஏப்ரல் 12, சேப்பாக்கம் (Chepauk Cricket Stadium): சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், இன்று ஐ.பி.எல் (IPL 2023) தொடரின் 17 வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals) அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் (CSK Vs RR) அணி வீரர்களில் ஜோஸ் பட்லர் 36 பந்துகளில் 52 ரன்களும், படிக்கல் 26 பந்துகளில் 38 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 22 பந்துகளில் 30 ரன்களும், ஹெட்மேயர் 16 பந்துகளில் 30 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர். Bihar Police: பாட்னா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் அதிரடி கைது.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தனர். இதனால் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது. சென்னை அணி இன்று வழக்கம்போல பந்துவீச்சில் சொதப்பி 10 ரன்களை கூடுதலாகவும் வழங்கியது.
இதனையடுத்து, சென்னை அணி 176 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்துடன் களத்தில் நிற்கிறது. ஆட்டத்தின் முதல் பாதியில் பந்துவீச்சில் சென்னை அணி சார்பாக விளையாடிய ஆகாஷ் சிங், துஷர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.