IND Vs ENG 3rd ODI 2025 | Toss Update (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 12, அகமதாபாத் (Sports News): இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் (India Vs England 3rd ODI 2025) கிரிக்கெட் போட்டி, இன்று (12 பிப்ரவரி 2025) குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் (IND Vs ENG Toss Update) வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை இந்திய தேசிய கிரிக்கெட் அணி வென்று கைப்பற்றிவிட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தையும் கைப்பற்றிவிட்டால் இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆறுதல் வெற்றியாவது அடைந்துவிட வேண்டும் என இங்கிலாந்து முயற்சிக்கிறது. SL Vs AUS 1st ODI: வாழ்வா? சாவா? இலங்கை - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி.. டாஸ் என்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி.! 

இந்தியா - இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி (IND Vs ENG Final ODI 2025):

ரோஹித் சர்மா தலைமையிலான (ENG Vs IND 3rd ODI Team India Squad) இந்திய அணியில், ஆர் சர்மா, எஸ் கில், வி கோஹ்லி, எஸ் ஐயர், கே.எல். ராகுல், எச் பாண்ட்யா, ஒரு படேல், டபிள்யூ சுந்தர், எச் ராணா, கே யாதவ், ஒரு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜோஸ் பட்லர் தலைமையிலான (ENG Vs IND 3rd ODI Team England Squad) இங்கிலாந்து அணியில் பி சால்ட், பி டக்கெட், ஜே ரூட், எச் ப்ரூக், ஜே பட்லர், டி பான்டன், எல் லிவிங்ஸ்டன், ஜி அட்கின்சன், ஒரு ரஷீத், எம் வூட், எஸ் மஹ்மூத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையிலும் பார்க்கலாம். இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி லேசான காயம் காரணமாக இடம்பெறவில்லை.

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு:

ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கவுள்ள இந்திய அணியின் வீரர்கள்: