S Gill & Virat Kohli (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 12, அகமதாபாத் (Gujarat News): இந்தியா - இங்கிலாந்து (India Vs England 3rd ODI) அணிகளுக்கு இடையேயான இறுதி ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி (IND Vs ENG 3rd ODI 2025) முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் வீரர்கள் இன்று தங்களின் அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி, மொத்தமாக 50 ஓவரில் 356 ரன்கள் குவித்து அசத்தி இருக்கின்றனர். IND Vs ENG 3rd ODI: ஒயிட் வாஸ் செய்யுமா இந்தியா? வருண் சக்கரவர்த்தி விலகல்.. பவுலிங் தேர்வு செய்தது இங்கிலாந்து.! 

இமாலய இலக்கு குவிப்பு:

இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய சுப்மன் ஹில் 102 பந்துகளில் 112 ரன்னும், விராட் கோலி 55 பந்துகளில் 52 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 64 பந்துகளில் 78 ரன்னும், கேஎல் ராகுல் 29 பந்துகளில் 40 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்துக்கு 357 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சார்பில் பந்து வீசிய ஆதில் ரசித் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்கள் கூட எடுக்காமல் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

100 ரன்களை கடந்து ஸுப்மன் ஹில் அசத்தல்:

50 ரன்களை குவித்து அசத்திய விராட் கோலி: