ஆகஸ்ட் 01, புதுடெல்லி (Sports News): இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் அன்ஷுமன் கேக்வாட் (Anshuman Gaekwad). இந்திய அணிக்காக 40 டெஸ்ட் தொடர்கள், 15 ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் போன்றவற்றில் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி அன்ஷுமனுக்கு தற்போது 71 வயது ஆகிறது. இவர் தனது இளமைக்காலத்தில், அதாவது, 1985ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக தனி நபராக 269 ரன்களை சேர்த்தும் அசத்தி இருந்தார். இந்திய அணிக்காக விளையாடி வந்த அன்ஷுமன், பின்னாளில் அணியில் இருந்து விலகி பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். LKK Vs ITT Qualifier 1 Highlights: சாய் சுதர்சன் அதிரடி சதத்தால் கோவை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி..!
அன்ஷுமன் மறைவுக்கு பலரும் இரங்கல்:
இதனிடையே, அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சையை அவர் பெற்று வந்தார். பிசிசிஐ (Board of Control for Cricket in India BCCI) நிர்வாகமும் அன்ஷுமனின் சிகிச்சைக்காக ரூ.1 கோடி வழங்கி இருந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கவுதம் காம்பீர் இரங்கல்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் காம்பீர் தனது எக்ஸ் பதிவில், "அன்ஷுமன் கெய்க்வாடின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடவுள் பலம் தரட்டும்" என தெரிவித்துள்ளார்.
Saddened by news of the demise of Anshuman Gaekwad ji. May god give strength to his family & loved ones. pic.twitter.com/64PT3VLyU4
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2024