பிப்ரவரி 22, மும்பை (Cricket News): 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 29 அன்று நிறைவு பெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தொடங்கும் இந்த ஆட்டம், குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வெகு விமர்சையாக நிறைவு பெறுகிறது. மொத்தம் பத்து அணிகள், 74 ஆட்டங்களில் அதிரடியாக ஆடி வெற்றிக்கனியை எட்டும். Survey- PM Modi Most Popular Leader of World: அப்படிப்போடு.. உலகளவில் தலைசிறந்த, புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்.. இந்தியாவே பெருமிதம்.!
குஜராத் டைட்டன்ஸ் அணி: வெற்றி பெறும் ஒரு அணி அடுத்த ஒரு ஆண்டுக்கு ஐபிஎல் வெற்றி கோப்பையை பெற்ற அணியாக இருக்கும் என்பதால், கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் பலத்தை எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது. நடப்பு 2024 ஆண்டிலும் வெற்றி யாருக்கு? என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியினருக்கும், அதன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. HC on Family Property: கணவர் தனது மனைவியின் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குடும்ப சொத்துக்களே - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
முகம்மது ஷமிக்கு காயம்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சாமி, இடது கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள காரணத்தால், அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்பதால், அவரை எதிர்பார்த்த அணிக்கும், வருத்தம் மிஞ்சியுள்ளது.