ENG Vs SA (Photo Credit: @ICC X)

மார்ச் 01, கராச்சி (Cricket News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், 10 வது ஆட்டம் இன்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (England National Cricket Team Vs South Africa National Cricket Team)-களுக்கு இடையே நடைபெறுகிறது. கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில், இங்கிலாந்து - தென்னாபிரிக்கா (ENG Vs SA Cricket) அணிகள் வெற்றிக்காக முனைப்பிட்டன. டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ENG Vs SA Toss Update: இங்கிலாந்து - தென்னாபிரிக்கா சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.!

179 ரன்கள் இலக்கு:

இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள், களத்தில் தடுமாறிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 38.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் வீரரால் பென் டக்கர் 21 பந்துகளில் 24 ரன்னும், ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்னும், ஹேரி புரூக் 19 பந்துகளில் 29 ரன்னும், ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 21 ரன்னும், ஜோப்ரா 31 பந்துகளில் 25 ரன்னும் அடித்து இருந்தனர். முதல் ஓவரில் தொடங்கிய தடுமாற்றம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க வைத்தது. தென்னாபிரிக்க அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் மார்கோ 3 விக்கெட்டுகள், வியான் 3 விக்கெட்கள், கேஷவ் 2 விக்கெட்டுகள் அதிகபட்சமாக கைப்பற்றி இருந்தனர்.

இதனால் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

அணியின் ரன்களை உயர்த்த போராடிய ஜோ ரூட் - ஹேரி புரூக் ஜோடி:

நெகிடியின் அசத்தல் பந்துவீச்சு: