ENG Vs SA | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)

மார்ச் 01, கராச்சி (Cricket News): 09 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரில், இன்று 10 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (England National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதுகிறது. நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் இங்கிலாந்து - தென்னாபிரிக்கா (ENG Vs SA Cricket) ஆட்டத்தில், இரண்டு அணிகளும் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்துகிறது. தென்னாபிரிக்க அணியின் காளீசன், இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷீத் தங்களின் அணிக்காக சிறப்பான பங்களிப்பை தற்போது வரை வெளிப்படுத்தி வருகின்றனர். கராச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையால் பாகிஸ்தான் - வங்கதேசம் ஆட்டம் முற்றிலும் தடைபட்டது, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் பகுதியளவில் தடைபட்டது. இன்று வறண்ட வானிலையே அங்கு நிலவி வருகிறது. IND Vs NZ Champions Trophy 2025: குரூப் 'ஏ'-வில் முதலிடம் யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்.. எப்போது? எங்கே? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.! 

டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்:

இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (ENG Vs SA Toss Update) பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் அணி தென்னாபிரிக்க அணி பந்துவீசுகிறது. இங்கிலாந்து அணியின் சார்பில் பென் டக்கெட், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத் ஆகியோர் விளையாடுகின்றனர். ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்துகிறார். தென்னாபிரிக்க அணியின் (South Africa Team Squad Today) சார்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி. ஆகியோர் விளையாடுகின்றனர். மார்க்கம் அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து அணியின் சார்பில் களமிறங்கவுள்ள வீரர்கள்:

தென்னாபிரிக்க அணியின் சார்பில் களமிறங்கவுள்ள வீரர்கள்:

தென்னாபிரிக்க வீரர்களின் விபரம்: