
பிப்ரவரி 19, கராச்சி (Sports News): ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 உலகக்கோப்பை போட்டி, இன்று (19 பிப் 2025) முதல் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியை, பாகிஸ்தான் நாடு தொகுத்து வழங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணி, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா என 8 நாடுகள் மொத்தமாக 25 ஆட்டங்களில் விளையாடி வெற்றியை நோக்கி நகரும். வெற்றிபெறும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது வின்னரான ரன்னர் அணிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்ற பாகிஸ்தான், இந்தியா உட்பட பல நாடுகள் முயலுகின்றன. GG Vs MI WPL 2025 Highlights: மும்பை அணி திரில் வெற்றி.. நடாலி அரைசதம் கடந்து அசத்தல்.. அமெலியா சிறப்பான பந்துவீச்சு.!
பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு:
போட்டியின் முதல் ஆட்டம் இன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. முதல் ஆட்டம் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Vs New Zealand Cricket)-களுக்கு இடையே நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பவுலிங் தேர்வு செய்ததால், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்கிறது. 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், சொந்த மண்ணில் பாகிஸ்தான் வெற்றியை தக்க வைக்குமா? அல்லது தோல்வியை தழுவி சொந்த நாட்டில் அதிர்ச்சியை கொடுக்குமா? என்ற முடிவு இரவுக்குள் ஹெரியவந்துவிடும்.
கராச்சி கிரிக்கெட் மைதானத்திற்கு புறப்பட்ட பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி:
Teams depart from hotel to National Stadium, Karachi for the opening match of ICC Champions Trophy 2025!#PAKvNZ | #ChampionsTrophy | #WeHaveWeWill pic.twitter.com/ZKWj4FhIQ4
— Pakistan Cricket (@TheRealPCB) February 19, 2025
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Squad for ICC Champions Trophy Match 1 Today Vs New Zealand) சார்பில் இன்று விளையாடும் வீரர்கள்:
🚨 TOSS & PLAYING XI 🚨
Pakistan win the toss and opt to bowl first 🏏
Our team for Match 1 of the ICC #ChampionsTrophy 2025 🇵🇰#PAKvNZ | #WeHaveWeWill pic.twitter.com/SnAfRzZtsK
— Pakistan Cricket (@TheRealPCB) February 19, 2025
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Squad for ICC Champions Trophy Match 1 Today Vs Pakistan) சார்பில் விளையாடும் வீரர்கள்:
Who will win the opening encounter of #ChampionsTrophy2025? #PAKvNZ pic.twitter.com/1ANbxz9A7d
— Cricbuzz (@cricbuzz) February 19, 2025