Will Young | Tom Latham (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 19, கராச்சி (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதனால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரர்கள் இன்று சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி, 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. PAK Vs NZ: வில் யங், டாம் லாதம் சதம் அடித்து விளாசல்.. சொந்த மண்ணில் திணறிய பாகிஸ்தான்.. 321 ரன்கள் இலக்கு.!

இரண்டு சதம், ஒரு அரை சதம்:

இதனிடையே, இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் சார்பில் விளையாடிய வில் யங் (Will Young), டாம் லாதம் (Tom Latham) ஆகியோர் சதம் அடித்து அசத்தி இருந்தனர். வில் யங் 113 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து இருந்தார். 12 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து அசத்தினார். 37.2 வது ஓவரில் அவர் நசீம் ஷாவின் பந்தை எதிர்கொண்டு, பஹீமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து வெளியேறினார். டாம் லாதம் (Tom Latham) தான் எதிர்கொண்ட 104 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து இருந்தார். இறுதிவரை அவர் ஆட்டம் இழக்கவில்லை. 10 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி இருந்தார். க்ளென் பிலிப்ஸ் 39 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். அவர் 3 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து இருந்த நிலையில், 49.4 வது ஓவரில் ஹாரிஸ் பந்தில், பஹர் ஜமானிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

வில் யங் 100 ரன்கள் அடித்து அசத்தல்:

டாம் லாதம் 100 ரன்கள் அடித்து அசத்தல்:

கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 50 ரன்களை கடந்து அசத்தல்:

இறுதி 5 ஒருநாள் போட்டிகளில் கிளன் வெளிப்படுத்திய அசத்தல் ஆட்டம்: