
பிப்ரவரி 19, கராச்சி (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025, இன்று முதல் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில், கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கிய போட்டியில் முதல் ஆட்டம் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. சமீபத்தில் அங்கு நடந்த டிரை-சீரிஸ் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான இறுதி போட்டியில், நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டு அணிகளும் தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியில் விளையாடுகிறது. Devon Conway: நியூசி., - பாக்.. சாம்பியன்ஸ் டிராபி 2025: முதல் விக்கெட் வீழ்ந்தது.. அப்ரார் அஹ்மத் அசத்தல்.!
பாகிஸ்தான் பீல்டரிங் தேர்வு:
போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு சீய்த்ததால், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள், இன்று சிறப்பாக தங்களின் பங்களிப்பை அணிக்கு வழங்கி இருந்தனர். தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு அதிரடி காண்பித்து இருந்தனர். நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் (Will Young) 113 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். தேவன் கான்வே 17 பந்துகளில் 10 ரன்கள் அடித்து, அப்ரார் அஹ்மத்தின் பந்தில் போல்ட் அவுட்டாகி வெளியேறினார். கேன் வில்லியம்சன் 2 பந்துகளில் 1 ரன்கள் அடித்தும், டரியில் மிட்செல் (Daryl Mitchell) 24 பந்துகளில் 10 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறினார். PAK Vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாகிஸ்தான் பௌலிங் தேர்வு.. பாக்., Vs நியூசி அணி விபரம் இதோ.!
பாகிஸ்தான் அணிக்கு 321 ரன்கள் இலக்கு:
கிளன் பிலிப்ஸ் (Glenn Phillips) 39 பந்துகளில் 61 ரன்கள் அடித்து கேட்ச் அவுட் ஆகினார். டாம் லாதம் (Tom Latham) இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணிக்காக 104 பந்துகளில் 118 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். லாதம் மற்றும் யங் ஆகியோரின் இரட்டை சதம் அணியின் ஸ்கோர் உயர மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி 320 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் பந்துவீசிய நசீம் ஷா, ஹாரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதனால் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி மறுமுனையில் களமிறங்கவுள்ளது.
வில் யங் (Will Young) சதம் விளாசி அசத்தல்:
Will Young delivers on the big stage and brings up the first century of the #ChampionsTrophy 2025 🫡#PAKvNZ 📝: https://t.co/E5MS83LjB8 pic.twitter.com/uZzNqcaLvt
— ICC (@ICC) February 19, 2025
அஹ்மத் அப்ரார் தேவன் கான்வேயின் விக்கெட் எடுத்தபோது:
Abrar Ahmed rattles Devon Conway's off stump 🎯#ChampionsTrophy pic.twitter.com/3OZl3ngER4
— champion Trophy 2025 (@ccricket713) February 19, 2025
சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டியின் தொடக்க விழாவில், பாகிஸ்தான் விமானப்படை பங்களிப்பை வெளிப்படுத்திய காட்சிகள்:
Lighting up the Karachi skyline! ✨
The Pakistan Air Force Sherdil Squadron delivered a thrilling air show ahead of the ICC #ChampionsTrophy 2025 opening match at the National Stadium ✈️🏟️#PAKvNZ pic.twitter.com/ixkSqPMfLD
— Pakistan Cricket (@TheRealPCB) February 19, 2025
டாம் லாதம் (Tom Latham) சதம் அடித்து விளாசல்:
Tom Latham scores a brilliant century in the #ChampionsTrophy 2025 opener 💯#PAKvNZ 📝: https://t.co/E5MS83KLLA pic.twitter.com/MWZAGplCbt
— ICC (@ICC) February 19, 2025
டாம் லாதம் சதம் அடித்து அசத்தல்:
A quality knock! 💯#TomLatham brings up a stunning century, putting New Zealand firmly in command against the defending champions! 💪🏻
FACT: Fifth time two batters have scored centuries in an innings in Champions Trophy!
📺📱 Start watching FREE on JioHotstar:… pic.twitter.com/vAKzM0pW1Y
— Star Sports (@StarSportsIndia) February 19, 2025