Match 10: Karachi Stadium Rain During AUS Vs AFG Match Day (Photo Credit: @ShakeelktkKhan X)

பிப்ரவரி 28, கராச்சி (Sports News): பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Australia National Cricket Team Vs Afghanistan National Cricket Team) மோதிக்கொண்டது. இந்திய நேரப்படி மதியம் 02:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. Rahmanullah Gurbaz: ஸ்பென்சரா? மிட்செலா? ஒரேயொரு யாக்கரில் ஆப்கானிஸ்தானின் முக்கிய விக்கெட் காலி..! 

ஆஸ்திரேலியா இலக்கை நோக்கி நகரும்போது மழை:

அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் இப்ராஹிம் 28 பந்துகளில் 22 ரன்கள், செடிகுல்லாஹ் 95 பந்துகளில் 85 ரன்கள், ஹஸ்மதுல்லா 49 பந்துகளில் 20 ரன்கள், ஓமர்சாய் 63 பந்துகளில் 67 ரன்கள் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். இதனால் 274 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸி., அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் ஸ்பென்சர், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள், பென் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி இருந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய இன்னிங்கில் 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரென வானிலை மாறி கடுமையான மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் மழை பெய்யும் காணொளி: