
பிப்ரவரி 23, துபாய் (Sports News): 9 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டி, பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) மோதிக்கொள்ளும் ஆட்டம், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Stadium, Dubai) வைத்து நடைபெறுகிறது. கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டியில், இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அபார வெற்றி அடைந்தது. இந்தியா தோல்வி அடைந்து ரன்னர் பட்டத்தை வென்றது.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் (India Vs Pakistan Cricket):
இந்தியா-பாகிஸ்தான் (IND Vs PAK Cricket) என்றாலே போட்டித்தன்மை அதிகம் இருக்கும் நிலையில், இன்றைய கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இன்று இந்தியாவுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்கிறது. இந்தியா, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றி அடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெறுமா? பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. RCB Vs UPW WPL 2025: ஆர்.சி.பி - உபி வாரியர்ஸ் அணி மோதும் அடுத்த ஆட்டம்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு (IND Vs PAK Toss Update):
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்ய தயாராகி இருக்கிறது. முகமது ரிஸ்வான் காயினை சுண்டிவிட்டு, ரோஹித் சர்மா ஹெட்ஸ் தேர்வு செய்த நிலையில், டைல்ஸ் கிடைத்ததால் பாகிஸ்தான் அணி டாஸை வென்றது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் விபரம் (Pakistan Team Playing Squad):
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், இன்று இமாம்-உ-ஹக், பாபர் அசாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், சல்மான் ஆகா, குஷ்தில் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ஃபர், அபர் அகமது ஆகியோர் களமிறங்குகின்றனர். IND Vs PAK Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்.. முந்தையை போட்டியில் டாப் யார்?
இந்தியா அணி வீரர்கள் விபரம் (India Team Playing Squad):
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மன் ஹில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, முகம்மது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்குகின்றனர். 2017ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா தோல்வி அடையாத நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்கள்:
🚨 TOSS & PLAYING XI 🚨
Pakistan win the toss and elect to bat first 🏏
One change to our playing XI for today's match 🇵🇰#PAKvIND | #ChampionsTrophy | #WeHaveWeWill pic.twitter.com/JkB5DcgibY
— Pakistan Cricket (@TheRealPCB) February 23, 2025
டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு:
🚨 Toss 🚨 #TeamIndia have been put in to bowl first
Updates ▶️ https://t.co/llR6bWyvZN#PAKvIND | #ChampionsTrophy pic.twitter.com/31WGTuKFTs
— BCCI (@BCCI) February 23, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்கள்:
Your #TeamIndia for today 💪
Updates ▶️ https://t.co/llR6bWyvZN#PAKvIND | #ChampionsTrophy pic.twitter.com/AzTW7e0PlP
— BCCI (@BCCI) February 23, 2025