PAK Vs BAN | ICC Champions Trophy 2025 | Match 9 (Photo Credit: @TheRealPCB X)

பிப்ரவரி 27, ராவல்பிண்டி (Cricket News): பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இன்று பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் தேசிய கிரிக்கெட் அணி மோதிக்கொள்ளும் ஆட்டம், ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் என திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது வரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், இன்று 09 வது ஆட்டம் நடைபெறுகிறது. RCB VS GG WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்; ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் இன்று மோதல்.. சொந்த மண்ணில் வெற்றியை எதிர்நோக்கி ஆர்.சி.பி.! 

மழையால் தள்ளிப்போன டாஸ் நேரம்:

புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தேர்வாக தவறிவிட்டன. இரண்டு அணிகளும் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலாவது இரண்டு அணிகளும் ஆறுதல் வெற்றி அடையுமா? சொந்த மண்ணில் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் வீழுமா? அல்லது சொந்த மண்ணில் வெற்றி அடைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றி தருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, ராவல்பிண்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக டாஸ் தாமதமாகியுள்ளது. ஒருவேளை மழை மாலை வரை தொடர்ந்தால், ஆட்டம் ரத்தாகும் வாய்ப்புகளும் உள்ளன. இது பாகிஸ்தான் - வங்கதேசம் அணி போட்டியை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு தவிப்பான மனநிலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த போட்டியை இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports 2) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.

ராவல்பிண்டி பகுதிகளில் தொடரும் மழை:

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடரும் மழை தொடர்பான காணொளி: