
பிப்ரவரி 27, பெங்களூர் (Cricket News): டாடா டபிள்யுபிஎல் பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 11 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலின்படி மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி தான் எதிர்கொண்ட 4 போட்டிகளில், 3 ல் வெற்றி பெற்று +0.780 என்.ஆர்.ஆர் மற்றும் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 போட்டிகளில் 3ல் வெற்றிகண்டு -0.223 என்.ஆர்.ஆர் புள்ளிகள் மற்றும் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தை தக்க வைத்திருந்த ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தான் எதிர்கொண்ட 4 போட்டிகளில், இறுதியாக விளையாடிய 2 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் Vs குஜராத் ஜெயிண்ட்ஸ் (Royal Challengers Bengaluru Vs Gujarat Giants):
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத்தில் நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி அடைந்தபோதிலும், தனது சொந்த மண்ணான எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மும்பை மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 2 ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது. இதனிடையே, பெண்கள் பிரீமியர் லீக் போட்டியின் 12 வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இரவு 07:30 மணியளவில், பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் போட்டியின் தொடக்க நாளில் மோதிக்கொண்டு, அதில் பெங்களூர் வெற்றி அடைந்தது.
நேரலை பார்ப்பது எப்படி? (Where to Watch RCB Vs GG WPL 2025 Live)
சொந்த மண்ணில் அன்று குஜராத் வீழ்ந்துவிட்ட நிலையில், இன்று தனது தோல்விக்கு பழிவாங்க பெங்களூர் அணியை குஜராத் தோற்கடிக்குமா? அல்லது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பெங்களூர் அணி பதிவு செய்யுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில், நமது மொழியிலும் நேரலையை கண்டுகளிக்கலாம்.
பெண்கள் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல் (TATA Women's Premier League WPL 2025 Points Table Today):
TATA Women's Premier League WPL Points Table Today 27-Feb-2025 #WPL2025 | pic.twitter.com/yiHSQZGW3x
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 27, 2025