Team India Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 24, புதுடெல்லி (Sports News): பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் இருக்கும் 8 அணிகள், தங்களின் அட்டவணைப்படி மோதிக்கொண்டது. குரூப் e பிரிவில் இடம்பெற்று இருந்த இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள், தான் எதிர்கொண்ட 2 போட்டிகளில் படுதோல்வி அடைந்தன. இதனால் நியூசிலாந்து அணி குரூப் ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் என்ஆர்ஆர் +0.863 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா 4 புள்ளிகளுடன் என்.ஆர்.ஆர் +0.647 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஆட்டம் மார்ச் 02, அன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. NZ Vs BAN Highlights: ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து விளாசல்.. நியூஸிலாந்து அணி அபார வெற்றி.. வங்கதேசம் படுதோல்வி.! 

நியூசிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு தேர்வு:

புள்ளிப்பட்டியலின்படி முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் குரூப் ஏ பிரிவில் இருந்து நேரடியாக அரையிறுதி தகுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, குரூப் பி பிரிவில் இருக்கும் முதல் இரண்டு அணிகள், வரும் நாட்களில் நடைபெறும் போட்டிக்கு பின்னர் தேர்வு செய்யப்படும். இந்த அணிகள் ஏ1 பி2 மற்றும் ஏ2 பி1 என பலப்பரீட்சை நடத்தி, இரண்டு போட்டிகளில் வெற்றி அடையும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படும். கடந்த 2017ம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தானிடம் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து ரன்னர் பட்டம் வென்றது. ஆனால், நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில், இந்திய கிரிக்கெட் அணி முதல் அரையிறுதி தகுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது.

நியூசிலாந்து அணி செமி பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது:

இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது: