NZ Vs BAN | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC / @Cricbuzz X)

பிப்ரவரி 24, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் போட்டியில், இன்று (பிப். 24, 2025) வங்கதேசம் - நியூசிலாந்து (BAN Vs NZ Champions Trophy 2025) அணிகள் மோதுகின்றன. ராவல்பிண்டி (Rawalpindi) கிரிக்கெட் மைதானத்தில், மதியம் 2.30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்ற நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் வங்கதேச அணி பேட்டிங் செய்து, 50 ஓவர்கள் முடிவில் 236 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியின் வீரர்கள் தஞ்சித் ஹாசன் 24 பந்துகளில் 24 ரன்னும், நஜ்மல் 110 பந்துகளில் 77 ரன்னும், மெஹிடி ஹாசன் 14 பந்துகளில் 13 ரன்னும், ஜாகிர் அலி 55 பந்துகளில் 45 ரன்னும், ரிஷத் ஹொசைன் 25 பந்துகளில் 26 ரன்னும், தஸ்கின் அஹ்மத் 20 பினாத்துகளில் 10 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். 50 ஓவர்களில் ௯ விக்கெட் இழப்புக்கு வங்கதேச கிரிக்கெட் அணி 236 ரன்கள் எடுத்திருந்தனர். இதனால் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. NZ Vs BAN: அதிரடியாக தெறிக்கவிட்ட நஜ்மல் ஹொசைன்.. நியூசிலாந்து அணிக்கு 236 ரன்கள் இலக்கு.!

நியூஸிலாந்து அணி அசத்தல் வெற்றி:

மறுமுனையில் 236 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ரவீந்திரா, நின்று ஆடி சதம் அடித்து விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். டாம் லாதம் அரை சத்தினை கடந்து இருந்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் களமிறங்கியவர்களில் கான்வே 45 பந்துகளில் 30 ரன்னும், ரவீந்திரா 105 பந்துகளில் 112 ரன்னும், டாம் லேதம் 76 பந்துகளில் 55 ரன்னும் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் களத்தில் இருந்த கிளன் பிலிப்ஸ் 28 பந்துகளில் 21 ரன்னும், மைக்கேல் பிரேஸ்வெல் 13 பந்துகளில் 11 ரன்னும் அடித்து அணியை வெற்றியடைய வைத்தனர். 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.

ரச்சின் ரவீந்திரா 100 ரன்கள் எடுத்து அபாரம்:

ஐசிசி போட்டிகளில் ரச்சின் ரவீந்திரா, அணிக்காக 4 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை எதிர்கொள்கிறார்: