Abrar Ahmad took the wicket of Devon Conway (Photo Credit: @Footy_Strikes / @PakPassion X)

பிப்ரவரி 19, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில், இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டிகள் தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Pakistan Cricket Team) - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (New Zealand Cricket Team) மோதுகிறது. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. PAK Vs NZ ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று பாகிஸ்தான் பௌலிங் தேர்வு.. பாக்., Vs நியூசி அணி விபரம் இதோ.!

தேவன் கான்வே விக்கெட்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் முதலில் வில் யங் - தேவன் கான்வே ஜோடி களமிறங்கியது. இதில் கான்வே 7.3 வது ஓவரில் அப்ரார் அஹ்மத் வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது நொடியில் மாயாஜாலம் செய்த அஹ்மத், தனது பந்துவீச்சில் நுணுக்கத்தை வெளிப்படுத்தி கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனை யாருமே எதிர்பார்க்காத நிலையில், கராச்சி மைதானம் கரகோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தது. மேலும், நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில், முதல் விக்கெட் தேவன் கான்வேயினுடையது.

22 வது ஓவர் நிலவரப்படி 3 விக்கெட் இழந்த நியூசிலாந்து அணி 98 ரன்கள் குவித்துள்ளது. கான்வே, கேன், டி. மிட்செல் ஆகியோரின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. நசீம், அப்ரார், ஹாரிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி இருக்கின்றனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் விக்கெட்:

ஸ்டெம்ப் தெறித்து தேவன் கான்வே வெளியேறிய காட்சிகள்: