AFG Vs SA | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ACBofficials X)

பிப்ரவரி 21, கராச்சி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், இரண்டாவதாக துபாயில் நடைபெற்ற வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தியா அணியும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, மூன்றாவது ஆட்டம் இன்று (21 பிப் 2025) தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Afghanistan National Cricket Team vs South Africa National Cricket Team Timeline) -களுக்கு இடையே நடைபெறுகிறது. IND Vs BAN Highlights: திரில் தந்த ஆட்டம்., சுப்மன் ஹில் அசத்தல்.. இந்தியா வெற்றி., வங்கதேசம் போராடி தோல்வி.!

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா & அணி வீரர்கள் விபரம்:

நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் தம்பா பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் ஆப்கானிஸ்தான் (SA Vs AFG Cricket) அணி முதலில் பந்துவீசுகிறது. ஆப்கானிஸ்தான் (Afghanistan Playing Squad) அணியின் சார்பில் ரஹ்முல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷமத்துல்லா ஷாஹிடி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், குல்பாதின் நைப், முகமது தீர்க்கதரிசி, ரஷிதான், நூர் அஹ்மத், ஃபசலஹ் ஆகியோர் களமிறங்குகின்றனர். அணியை ஹஷமத்துல்லா ஷாஹிடி வழிநடத்துகிறார். தென்னாபிரிக்க அணியின் சார்பில் ரியான் ரிக்கெல்டன், டோனி டி சோர்சி, டெம்பா பவுமா, ராஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோர் விளையாடுகின்றனர். அணியை தம்பா வழிநடத்துகிறார்.

தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கவுள் வீரர்களின் பட்டியல்: