
பிப்ரவரி 20, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இந்தியா - வங்கதேசம் (India Vs Bangladesh Champions Trophy) அணிகள் இடையே துபாயில் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்மல் ஹொசைன் (Najmul Hossain Shanto), பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, தொடக்கத்தில் பயங்கரமாக நிலைதடுமாறியது. அந்த அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில், முதல் 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி தந்தனர். இதனால் வங்கதேச அணி 20 ஓவர்கள் தாங்குமா? 25 ஓவரில் காலியாகிவிடுமா? என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ந்துபோயினர். IND Vs BAN: லட்டு கேட்ச்களை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடியாக ரன்கள் குவித்த வங்கதேசம்.. 229 ரன்கள் இலக்கு.!
அணியின் போக்கை மாற்றிய பார்ட்னர்ஷிப் (Tawhid Hridoy & Jaker Ali Partnership):
ரஜினி பட வெளியீட்டு விழாவில் பேசியதுபோல, வங்கதேசம் என்ற குதிரை வீழ்ந்துவிடுமா? என பலரும் அதிர்ந்த நேரத்தில், கேஜிஎப் ராக்கி பாய் போல வந்த தவஹீத் ஹிரோடி - ஜாகர் அலி ஜோடி நின்று அணி ரன்களை குவிக்கத் தொடங்கியது. 8 ஓவருக்கு பின்னர் தனது விக்கெட்டையும் இழக்காமல், அணிக்கு ரன்களை குவிக்க வேண்டிய நிலையிலும் இருவரும் நின்று ஆடினர். இதில் தவ்ஹித் ஹ்ரிடோய் 118 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். அவருடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்த ஜாகிர் அலி 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இருவரும் மட்டும் 168 ரன்கள் எடுத்திருந்தனர். இறுதியில் 49.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த வங்கதேச அணி 228 ரன்கள் எடுத்தது. இதனால் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. Rohit Sharma Apology: கேட்சை தவறவிட்டு, குழந்தை போல மன்னிப்பு கேட்ட ரோஹித் சர்மா.. நெகிழவைக்கும் வீடியோ.!
முதல் 8 ஓவர், இறுதி 8 ஓவர்:
தொடக்கத்தில் முதல் 2 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட், பின் அக்சர் படேல் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட் என அசத்தலான பந்துவீச்சை இந்தியா வெளிப்படுத்தினாலும், எளிதாக கைக்கு வந்த கேட்ச்களை தவறவிட்டு இந்தியா சொதப்பியது. இதனால் ஆட்டத்தில் திருப்புமுனை உண்டாகி அலி - தவ்ஹித் நின்று ஆடி அணிக்கு பக்கபலமாக இருந்தனர். இந்திய அணியின்ஸ் சார்பில் பந்துவீசிய முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி, 53 ரன்கள் அடிக்கவிட்டு 5 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் வாயிலாக முகமது ஷமி (Mohammad Shami) 200 வது விக்கெட்டையும் ஒருநாள் தொடரில் கைப்பற்றி இருந்தார். ஹர்ஷித் ராணா (Harshit Rana) 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் எடுக்க விட்டு, 3 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அக்சர் படேல் (Axar Patel) 9 ஓவர்கள் வீசி 43 ரன்கள் அடிக்கவிட்டு, 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 8 வது ஓவரில் விக்கெட் எடுத்த இந்தியா, இறுதியாக 42 வது ஓவரில் தான் ஆறாவது விக்கெட்டை எடுக்க தொடங்கியது. இறுதி 8 ஓவரில் எஞ்சியிருந்த 5 விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தது. Axar Patel: அடுத்தடுத்து 2 விக்கெட் எடுத்த அக்சர் படேல்.. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல்.!
இந்தியா போராடி வெற்றி:
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். எஸ்.ஐயர் 17 பந்துகளில் 15 ரன்கள், அக்சர் படேல் 12 பந்துகளில் 8 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினர். சுப்மன் ஹில் - கே.எல் ராகுல் ஜோடி நின்று ஆடி அணியின் வெற்றிப்பாதைக்கு தேவையான ரன்களை சேர்த்தது. கேஎல் ராகுல் 47 பந்துகளில் 41 ரன்னும், சுப்மன் ஹில் 129 பந்துகளில் 101 ரன்னும் அடித்து இறுதி வரை அவுட் ஆகாமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இந்திய அணி 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. வங்கதேசம் அணி தோல்வி அடைந்தது. இன்று வங்கதேசத்தின் ஆட்டம் தோல்வியில் முடிந்தாலும், ஆட்டத்தின் தன்மையை நின்று மாற்றலாம் என்ற விஷயத்தை தவ்ஹீத் - அலி ஆகியோர் பின்னால் ஆடும் வீரர்களுக்கும், அணியில் இணைய நினைக்கும் வீரர்களுக்கும் அடையாளமாக விட்டுச் சென்றுள்ளனர்.
விக்கெட்டை தவறவிட்டு ரோஹித் சர்மா மன்னிப்பு கேட்ட காட்சி:
Indian skipper Rohit Sharma drops a sitter, denying Axar Patel a hat-trick! 💔😥
The captain looks extremely disappointed and apologizes to the bowler for missing his big moment 🇮🇳🙏🏻#AxarPatel #RohitSharma #INDvBAN #ODIs #Sportskeeda pic.twitter.com/xX4inBxwa5
— Sportskeeda (@Sportskeeda) February 20, 2025
சுப்மன் ஹில் அணிக்காக ரன்கள் குவித்து அசத்தல்:
#ShubmanGill is on fire! 🔥
The No. 1 ODI batter shows his brilliance with a stunning half-century. He’s in red-hot form, and the opposition is feeling the heat! #ChampionsTrophyOnJioStar 👉 #INDvBAN, LIVE NOW on Star Sports 1 & Star Sports 1 Hindi! pic.twitter.com/mwYYiJPMNX
— Star Sports (@StarSportsIndia) February 20, 2025
கோலி & ஷமி ஒன்றிணைந்து விக்கெட் வீழ்த்திய காட்சி:
𝐒𝐡𝐚𝐦𝐢'𝐬 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 🤝 𝐊𝐢𝐧𝐠 𝐊𝐨𝐡𝐥𝐢'𝐬 𝐂𝐚𝐭𝐜𝐡
Shami claims his 3rd wicket, breaking the 154-run 6th wicket partnership, the highest in Champions Trophy history! 🤯
📺📱 Start Watching FREE on JioHotstar 👉 https://t.co/dWSIZFfMb6#ChampionsTrophyOnJioStar… pic.twitter.com/8MLHcn3tnx
— Star Sports (@StarSportsIndia) February 20, 2025
விக்கெட்டை தவறவிட்டு குழந்தை போல கதறி, பின் மன்னிப்பு கேட்ட ரோஹித்:
WHAT HAVE YOU DONE ROHIT 😯
Axar Patel misses out on a hatrrick vs Bangladesh as Rohit Sharma dropped a sitter in the slip region. pic.twitter.com/6h7txDasEN
— Sports Production (@SSpotlight71) February 20, 2025
கைகூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்:
Rohit Sharma apologized to Axar Patel with folded hands after dropping a catch on the hat-trick ball.#IndvsBan pic.twitter.com/viWhXY5YYZ
— Yanika_Lit (@LogicLitLatte) February 20, 2025
98 மீட்டர் சிக்ஸர் அடித்து கில் அசத்தல்:
9️⃣8️⃣metres 😲
A breathtaking six from Shubman Gill.
Watch LIVE on @StarSportsIndia in India.
Here's how to watch LIVE wherever you are 👉 https://t.co/AIBA0YZyiZ pic.twitter.com/LgIK5AjixQ
— ICC (@ICC) February 20, 2025
சுப்மன் கில் சதம் (Shubman Gill Century):
Shubman Gill kicks off his #ChampionsTrophy campaign with a bang 💥#BANvIND ✍️: https://t.co/zafQJUBu9o pic.twitter.com/iw0weSBilG
— ICC (@ICC) February 20, 2025