
மார்ச் 09, துபாய் (Cricket News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025 Final) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்கிறது. இன்றைய அடித்ததில் இரண்டு அணிகளும் மிகசிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் (Will Young) 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். வருண் சக்கரவர்த்தியின் பந்தில், எல்பிடபிள்யு முறையில் வில் யங் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். Tom Latham: ஜடேஜாவின் சூழலில் சிக்கிய டாம் லேதம்; 14 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி.!
கிளன் விக்கெட் பறிபோனது (Glenn Phillips Wicket):
முக்கிய பேட்டர்களான ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, கென் வில்லியம்சன் (Kane Williamson) 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்து 10.1 மற்றும் 12.1 ஓவர்கள் முறையே விக்கெட் இழந்து வெளியேறினார். ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளில் 23.2 வது ஓவரில், 30 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். எல்பிடபிள்யு முறையில் டாம் லேதம் விக்கெட் பறிபோனது. இந்நிலையில், கிளன் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட் எடுத்து வெளியேறினார். 37.5 வது ஓவர் முடிவில், கிளன் தனது 52 வது பந்தை எதிர்கொண்டபோது, வருண் சக்கரவர்த்தியின் பந்தில் போல்ட் அவுட் எடுத்து வெளியேறினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 39 வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
வருண் சக்கரவர்த்தியின் பந்தில் வீழ்ந்த கிளன் பிலிப்ஸ் விக்கெட்:
Beauty is an understatement! 😍🙌🏻#GlennPhillips had no answers to #VarunChakaravarthy's vicious googly! 👍🏻#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Start Watching FREE on JioHotstar:… pic.twitter.com/YGiL7KgJhm
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025