India Vs Australia ODI Tour 2023 (Photo Credit: Twitter)

செப்டம்பர் 20, புதுடெல்லி (Sports News): ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023, உலகக்கோப்பை 2023 என இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் நடக்கும் அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தினை தந்துள்ளது. நடந்து முடிந்த ஆசியக்கோப்பை 2023ல் ஒருநாள் இன்னிங்ஸ் பிரிவில், இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணியை அபாரமாக எதிர்கொண்டு கோப்பையை தனதாக்கியது. இலங்கை அணி தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது.

மறுமுனையில் தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS ODI Tour) அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்கவுள்ளன். இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியுடன் - இந்திய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மோதுகிறது. இது இரண்டு அணிகளுக்கும் இடையேயான உலகக்கோப்பை பயிற்சியாக கவனிக்கப்படுவதால் போட்டி முக்கியத்துவமாக கவனிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியிலும் நட்சத்திர ஆட்டக்காரர்களாக கருதப்படு ஸ்டீவ் ஸ்மித், மிட்செல், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் செப்.22 அன்று மொஹாலி இந்திரஜித் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மானியாவில் தொடங்குகிறது. அதனைதொடர்ந்து, இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் செப். 24 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06:00 மணிக்கு இரண்டாவது ஆட்டமும் நடைபெறுகிறது. MS Dhoni Spotted: மும்பை விமான நிலையத்தில் தல தோனி; வைரலாகும் வீடியோ.! 

இறுதியாக உள்ள மூன்றாவது ஆட்டம் செப். 27ம் தேதி புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் ராஜ்கோட்டில் அமைந்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த மூன்று போட்டிகளையும் Fox Sports (Channel No. 501) தொலைக்காட்சியில் காணலாம். அதேபோல, Kayo செயலியில் நேரில் கண்டுகளிக்கலாம்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களுக்கு அணியை கே.எல் ராகுல் வழிநடத்துகிறார். துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இருக்கிறார். அணியில் ருத்ராஜ் (Rutraj), ஷுப்னம் ஹில் (Gill), ஷ்ரேயாஸ் (S Iyer), சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadhav), திலக் வர்மா (Tilak Verma), இஷான் கிஷான் (Ishan Kishan), ஷர்த்துல் தாகூர், வாஷிங்க்டன் சுந்தர் (W Sundar), ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin), முகம்மத் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகம்மத் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது ஒருநாள் தொடரை ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான அணி எதிர்கொள்கிறது. துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா (H Pandya) நியமிக்கப்பட்டுள்ளர். அணியில் ஹில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்த்துல் தாகூர், அக்சார் படேல், வாஷிங்க்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மத் ஷமி, முகம்மத் சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார். அணியில் சீன் அபோட், அலெக்ஸ் கார்லே, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ், ஆரோன், ஜோஷ் இங்கிலீஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்ன்ஸ், மிச்சேல், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.