நவம்பர் 09, பெங்களூர் (Sports News): ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023, இந்தியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், 41வது போட்டி நடைபெறுகிறது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. 19 நவம்பர் 2023 அன்று 2023 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டில் உலகக்கோப்பை 2023 தொடரை தலைமையேற்று, ஒற்றை நாடாக நடத்தி வரும் இந்தியா, தொடர்ந்து கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் இறுதியில் இலங்கை அணி 46.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. Omegle Website Shut Down: வீடியோ சாட்டிங் செயலி ஓமெக்லீ சேவை நிறுத்தம் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.. பகீர் தகவலை பகிர்ந்த நிறுவனர்.!
இலங்கை அணியின் சார்பில் விளையாடியவர்களில் குஷால் 28 பந்துகளில் 51 ரன்னும், அங்கேலோ 27 பந்துகளில் 16 ரன்னும், சில்வா 24 பந்துகளில் 19 ரன்னும், மகேஷ் 91 பந்துகளில் 38 ரன்னும் மட்டுமே எடுத்திருந்தனர். இது இலங்கை அணியின் வெற்றியை பெரிய கேள்விக்குறியாக்கியது. இன்றைய போட்டி பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்த்த கிரிக்கெட் ரசிகர்ளுக்கு, இலங்கை அணியின் சொதப்பல் பேட்டிங் ஏமாற்றத்தையே அளித்தது.
மறுமுனையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி, 25 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்தது. டெக்கான் 42 பந்துகளில் 45 ரன்னும், ரவீந்திரா 34 பந்துகளில் 42 ரன்னும், மிச்சேல் 31 பந்துகளில் 43 ரன்னும், கிளீன் 10 பந்துகளில் 17 ரன்னும் அடித்திருந்தனர். ஆட்டத்தின் இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு, 23.2 ஓவரில் 172 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி அபார வெற்றி அடைந்தது.