Shubman Gill (Photo Credit: @ICC X)

பிப்ரவரி 19, புதுடெல்லி (Sports News): உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடர், பாகிஸ்தானில் இன்று விறுவிறுப்புடன் தொடங்கி இருக்கிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற டிரை-சீரிஸ் போட்டித்தொடரில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதி, நியூசிலாந்து அணி இறுதி கோப்பையை தட்டிச் சென்றது. இதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில், வெற்றிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக போராடவுள்ளன. Devon Conway: நியூசி., - பாக்.. சாம்பியன்ஸ் டிராபி 2025: முதல் விக்கெட் வீழ்ந்தது.. அப்ரார் அஹ்மத் அசத்தல்.! 

பேட்டிங், பீல்டரிங், ஆல்ரவுண்டர் பட்டியலில் டாப் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் வலதுகை ஆட்டக்காரர் சுப்மன் கில் (Shubman Gill), பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாமை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முன்னேறி சாதனை புரிந்துள்ளார். மேலும், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர், வேகப்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்சனா (Maheesh Theekshana), பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் டவீக்கர் ரஷீத் கானின் தரவரிசை புள்ளிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். அதனைத்தொடர்ந்து பாகிஸ்தானின் பாபர் அசாம், இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். பந்துவீச்சு தரவரிசை பட்டியலைப் பொறுத்தவரையி மஹீஸ் தீக்சனா முதல் இடத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் பௌலர் ரஷீத் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் கேசவ் மகாராஜ் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வீரர் முகமது நபி, ஆல்ரவுண்டர் பட்டியல் தரவரிசையில் முதல் இடத்தில இருக்கிறார்.

ஐசிசி தரவரிசை பட்டியல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு:

புதுப்பிக்கப்பட்ட ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் பிரிவில் தரவரிசை பட்டியல் விபரம் பின்வருமாறு.,