ஜனவரி 26, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. நேற்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் திலக் வர்மா (Tilak Varma), 55 பந்துகளில் 72 ரன்கள் விளாசி அசத்தி இருந்தார். IND Vs ENG 2nd T20i 2025 Highlights: இந்தியா - இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி: இந்திய அணி அசத்தல் வெற்றி.!
அடுத்த ஆட்டம் எப்போது? (ENG in IND 5 T20Is 2025)
அதனைத்தொடர்ந்து, மூன்றாவது டி20 தொடர் (India Vs England 3rd T20i Venue) ஆட்டம், குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், நிரஞ்சன் ஷா (Niranjan Shah Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் 28 ஜனவரி 2025 அன்று, இரவு 07:00 மணியளவில் இந்திய நேரப்படி தொடங்குகிறது. போட்டி நடைபெறும் அன்று வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸ் இருக்கலாம் என வானிலையில் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. காற்றின் வேகம் 3 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)-இலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் (Disney Hotstar)-இலும் நேரலையில் பாக்கலாம்.