ஜனவரி 26, குலாலம்பூர் (Sports News): ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை 2025 போட்டி (ICC WOMENS U19 T20 WORLD CUP 2025), மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நைஜீரியா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் மோதிக்கொள்கின்றன. 31 ஜனவரி 2025 அன்று முதல் மற்றும் இரண்டாம் தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு, 02 பிப்ரவரி 2025 அன்று இறுதி போட்டி நடைபெறுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை https://www.icc-cricket.com/tournaments/u19-womenst20worldcup/matches இங்கு காணவும். IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டி20 ஆட்டம்; நேரலையில் பார்ப்பது எப்படி? எங்கு நடக்கிறது? விபரம் இதோ.!
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதல் (ICC INDW Vs BANW U19 T20i 2025):
இந்தியா சார்பில் நிகி பிரசாத் கேப்டனாக அணியை வழிநடத்த, அவரின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் திரிஷா, கமலினி, சங்கா, நிகி, ஐஸ்வரி, மிதிலா, ஆயுஷி, ஜோஷிதா, ஷப்னம், பருணிகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று இந்தியா - வங்கதேச அணிகள் (India Women U19 vs Bangladesh Women U19) மோதிக்கொள்ளும், தொடரின் 7 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் யு19 அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் வங்கதேச யு19 அணி மகளிர் அணி பேட்டிங் செய்து வருகிறது. போட்டியின் நேரலையை https://www.bcci.tv/events/207/icc-womens-u19-t20-world-cup-2025/match/1793/7th-t20i என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.
யு19 டி20 உலகக்கோப்பை போட்டியில், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் வீராங்கனைகள் விபரம்:
🚨 Toss & Team News 🚨#TeamIndia have elected to bowl against Bangladesh.
A look at our Playing XI 🔽
Updates ▶️ https://t.co/gqvo3PMFUq#INDvBAN | #U19WorldCup pic.twitter.com/EXZSHqsH3p
— BCCI Women (@BCCIWomen) January 26, 2025