Telangana CM Revanth Reddy with & Trisha G (Photo Credit: @TelanganaCMO X)

பிப்ரவரி 06, ஹைதராபாத் (Sports News): மலேஷியா நாட்டில் உள்ள குலாலம்பூர் நகரில், ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி (ICC Women's U19 T20 World Cup Championship), இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க மகளிர் யு19 கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு அபார வெற்றி அடைந்தது. இதனால் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் யு19 (Team India U19) கிரிக்கெட் அணிக்கு, பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது. இந்திய அணியில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொங்காடி திரிஷா (Trisha G) இடம்பெற்று இருந்தார். இவர் தனது ஆல்ரவுண்டர் சிறப்பான ஆட்டம் வாயிலாக பலரின் கவனத்தையும் ஈர்த்தார், இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். Rahul Dravid: கார் மீது மோதிய ஆட்டோ.. நடுரோட்டில் டிரைவரிடம் சண்டை செய்த ராகுல் டிராவிட்.. வீடியோ வைரல்..!

ரூ.1 கோடி பரிசுத்தொகை:

இந்நிலையில், போட்டியை முடித்துக்கொண்டு ஹைதராபாத் வந்த திரிஷாவுக்கு, தெலுங்கானா மாநில (Telangana Govt) அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரிஷாவுக்கு (Gongadi Trisha) ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி (Revanth Reddy), ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து, திரிஷாவுக்கு (Trisha G) பரிசுத்தொகையை வழங்கினார். மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நவுசின் அல் காதிருக்கு ரூ.10 இலட்சமும், பயிற்சியாளர் ஷாலினிக்கு ரூ.10 இலட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

திரிஷாவுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்த தெலுங்கானா முதல்வர்: