
மார்ச் 25, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், ஐந்தாவது ஆட்டம், இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (Gujarat Titans Vs Punjab Kings) அணிகள் இடையே நடைபெறும் ஆட்டம், இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. குஜராத் - பஞ்சாப் (GT Vs PBKS IPL 2025) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!
குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில் (Gujarat Titans IPL 2025 Squad) ஷுப்மன் ஹில் கேப்டனாக இருக்கிறார். அணியில் ஹேர்பெனே ருத்தேர்போர்ட், ஷாருக் கான், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ராகுல் திவேதியா, மணிபால் லோமர், வாஷிங்க்டன் சுந்தர், மாணவ் சூதர், கரீம் ஜனத், நிஷாந்த் சிந்து, காகிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், குலவந்த் க்ஹெஜுலியா, ரஷீத் கான், ஜெரால்டு கோட்ஸ், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் (Punjab Kings IPL 2025 Squad) ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருக்கிறார். அணியில் ஸூர்யன்ஸ் ஷெட்ஜ், பிரியன்ஸ் ஆர்யா, பைலே அவினாஷ், ஹரனூர் பண்ணு, ஹூர்மூர் பானு, ப்ரபிசிம்ரான் சிங், விஷ்ணு வினோத், ஜோஷ் இங்கிலிஷ், குல்தீப் சென், ஹர்பீத் பரர், அஸ்மதுல்லா ஓமர்சாய், நிஹால் வதேரா, யாஷ் தாகூர், ஷஹாங்க் சிங், மர்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் ஹார்டி, கிளன் மேக்ஸ்வெல், முஹீர் கான், மார்கோ ஜான்சன், யஷவேந்திர சாஹல், அர்ஷிதீப் சிங், விஜயகுமார், சேவியர் பார்லெட், பிரவின் துபே, லோக்கி பிரேக்குசோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.