Shahrukh Khan (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 17, கோயம்புத்தூர் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோலாஸ்-லைக்கா கோவை கிங்ஸ் (TGC Vs LKK) அணிகள் மோதின. இந்த போட்டி கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. 20 Years Imprisonment: 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்கள்; 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!

இதனையடுத்து, களமிறங்கிய திருச்சி அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அர்ஜுன் மூர்த்தி 3 ரன்கள், வசீம் அகமது 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆண்டனி தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் ஷாருக்கான், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய சுரேஷ் குமார் டக் ஆவுட் ஆக, சாய் சுதர்சனும் 4 ரன்களில் வெளியேறினார். சுஜய், முகிலேஷ் இருவரும் 92 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தனர். இறுதியில், கோவை அணி 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ஷாருக் கான் பெற்று சென்றார்.