
ஜூன் 09, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று (ஜூன் 08) நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. CSG Vs NRK: டிஎன்பிஎல் 6வது மேட்ச்.. சேப்பாக் - நெல்லை அணிகள் இன்று மோதல்..!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (Chepauk Super Gillies Vs Nellai Royal Kings):
இந்நிலையில், இன்று (ஜூன் 09) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (CSG Vs NRK, Match 6) அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 1 போட்டியிலும், நெல்லை அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:
ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், பாபா அபராஜித் (கேப்டன்), விஜய் ஷங்கர், ஜகதீசன் நாராயண், தினேஷ் ராஜ் எஸ், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், அபிஷேக் தன்வர், எம் சிலம்பரசன், என் சுனில் கிருஷ்ணா. Jos Buttler: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜோஸ் பட்லர் மாபெரும் சாதனை..!
நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீரர்கள்:
அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருஸ்வாமி, ரிதிக் ஈஸ்வரன், பிஎஸ் நிர்மல் குமார், என்எஸ் ஹரிஷ், சோனு யாதவ், முகமது அத்னான் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யுதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், உதய குமார் எம்.