
மே 26, ஜெய்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று (மே 26) நடப்பு ஐபிஎல் தொடரின் 69வது ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி, 4வது இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் மோதுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. PBKS Vs MI: புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.. தொடர்ந்து 14 இன்னிங்ஸ்..!
பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Punjab Kings Vs Mumbai Indians IPL 2025):
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா ஜோடி தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 27, ரோஹித் 24 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) அதிரடியாக விளையாடி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தொடர்ச்சியாக, அதிக இன்னிங்ஸில் (14) 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இப்போட்டியில், 57 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவுட்டானார். மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்கள் அடித்தது. இதன்மூலம், பஞ்சாப் வெற்றிக்கு 185 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் அரைசதமடித்து அசத்தல்:
Consistency, thy name is Surya Kumar Yadav 🙌
He leads #MI's batting effort yet again with a crafty and crucial 5⃣0⃣🫡
Updates ▶ https://t.co/Dsw52HOtga#TATAIPL | #PBKSvMI | @mipaltan | @surya_14kumar pic.twitter.com/dZwLlLm0e0
— IndianPremierLeague (@IPL) May 26, 2025