
மே 21, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 21) நடப்பு சீசனில் 63வது ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Mumbai Indians Vs Delhi Capitals) அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆப்பை உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. MI Vs DC: பிளே ஆப்க்குள் செல்லப்போவது யார்? டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
சூர்யகுமார் யாதவ் அரைசதம்:
இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. திலக் வர்மா 27 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் இறுதியில் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார். நமன்தீர் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் குவித்தது. டெல்லி அணி வெற்றிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூர்யகுமார் அரைசதம் அடித்து அசத்தல்:
Another day, another Surya Kumar Yadav 5⃣0⃣🫡#MI's Mr. Consistent is on the charge! 👏
Updates ▶ https://t.co/fHZXoEJVed#TATAIPL | #MIvDC | @mipaltan | @surya_14kumar pic.twitter.com/L6kROrHgop
— IndianPremierLeague (@IPL) May 21, 2025