LSG Vs RCB: ரிஷப் பந்த் அதிரடி சதம்.. செலபிரேஷன் வேற லெவல்..!
ஐபிஎல் 2025 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார்.
மே 27, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 27) 70வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் போட்டி ஆகும். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிரண்டு இடங்களுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. LSG Vs RCB: ஆர்சிபி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப் பயணம் தொடருமா? அனல் பறக்கும் ஆட்டம்..!
சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Lucknow Super Giants Vs Royal Challengers Bengaluru):
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மாத்யூ 14 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த ரிஷப் பந்த், மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். 2வது விக்கெட்டுக்கு 78 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்த நிலையில், மிட்செல் மார்ஷ் 67 ரன்களுக்கு அவுட்டானார். மறுபுறம், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 100 அடித்து அசத்தினார்.
ரிஷப் பந்த் செலபிரேஷன்:
Rishabh Pant Celebration after his 100🥶🔥 pic.twitter.com/uXjLY8w7SL
— Surya (@SuryaDhoni22) May 27, 2025
(The above story first appeared on LatestLY on May 27, 2025 09:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

