
மே 21, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், நேற்று (மே 20) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று (மே 21) நடப்பு சீசனில் 63வது ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. MI Vs DC: வெற்றியுடன் தொடருமா மும்பையின் பயணம்? இன்று டெல்லி அணியுடன் மோதல்.!
டெல்லி டாஸ் வென்று பவுலிங் தேர்வு:
இதில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Mumbai Indians Vs Delhi Capitals) அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்து பிளே ஆப் செல்ல முயற்சிக்கும். ஏற்கனவே, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆப்பை உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியில் கேப்டன் அக்சர் படேலுக்கு பதிலாக பாப் டூ ப்ளிசிஸ் கேப்டனாக செயல்படுகிறார்.