
மே 20, டெல்லி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று (மே 20) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் தொடர் தோல்வியால், ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. CSK Vs RR: ராஜஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா சென்னை..?
சென்னை அதிரடி ஆட்டம்:
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணிக்கு ஆயுஸ் மாத்ரே - டெவான் கான்வே ஜோடி களமிறங்கியது. கான்வே 10, உர்வில் பட்டேல் 0 ரன்னிலும் அவுட்டாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்தனர். மறுபுறம் அதிரடியாக விளையாடிய மாத்ரே 20 பந்தில் 43 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அஸ்வின் 13, ஜடேஜா, 1 ரன்னிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 7.4 ஓவர்களில் சென்னை அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
188 ரன்கள் இலக்கு:
இந்நிலையில், ஜோடி சேர்ந்த டெவால்டு பிரேவிஸ் - சிவம் துபே அதிரடியாக விளையாடினர். இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மாத்ரே 43, பிரேவிஸ் 42 ரன்கள் அடித்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆகாஷ் மத்வால், யுத்வீர் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரேவிஸ் அதிரடி ஆட்டம்:
𝘿𝙞𝙙 𝙞𝙩 𝙬𝙞𝙩𝙝 𝙨𝙬𝙖𝙜 😎
Rate this Dewald Brevis' no look maximum 🙅
Updates ▶ https://t.co/hKuQlLxjIZ #TATAIPL | #CSKvRR | @BrevisDewald pic.twitter.com/8Ia2QRMvX8
— IndianPremierLeague (@IPL) May 20, 2025