
மே 20, டெல்லி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இதுவரை 61 ஆட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்று (மே 20) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் தொடர் தோல்வியால், ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும், இரு அணிகளும் வெற்றியோடு தொடரை முடிக்க ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. CSK Vs RR IPL 2025: ஆறுதல் வெற்றிக்கு அடித்தளம்போடும் சென்னை? ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று மோதல்.!
ராஜஸ்தான் டாஸ் வென்று பவுலிங் தேர்வு:
இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில், கடைசி இடத்தில் உள்ளன. ராஜஸ்தான் அணி 9வது இடத்திலும், சென்னை அணி 10வது இடத்திலும் இருக்கின்றன. இந்நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் எந்தவித மாற்றமின்றி விளையாடுகிறது.
சென்னை - ராஜஸ்தான் அணிகள் டாஸ் அப்டேட்:
🚨 Toss 🚨 @rajasthanroyals won the toss and elected to field against @ChennaiIPL
Updates ▶️ https://t.co/hKuQlLxjIZ #TATAIPL | #CSKvRR pic.twitter.com/TW5zGgi6SA
— IndianPremierLeague (@IPL) May 20, 2025