
மே 20, டெல்லி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் போட்டியில், இதுவரை 61 ஆட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. நேற்று (மே 19) நடைபெற்ற லக்னோ - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி இறுதியில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடரில் இருந்து ஹைதராபாத் அணி வெளியேறினாலும் ஆறுதல் வெற்றியாக அந்த அணியின் ரசிகர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது.
வெற்றி யாருக்கு? சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல்ஸ் (Chennai Super Kings Vs Rajasthan Royals IPL 2025):
நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் தொடர் தோல்வியால் முதலிலேயே பிளே ஆப் தகுதி வாய்ப்பை இழந்த சென்னை அணி, இறுதி கட்டத்தில் ரசிகர்களுக்காக சில ஆறுதல் வெற்றியை அடைந்துள்ளது. அந்த வகையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தானை சென்னை அணி வீழ்த்துமா? அல்லது தொடர் தோல்வியால் ரசிகர்களுக்கு வருத்தத்தை பரிசளிக்குமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதேபோல, சென்னையின் தொடர் தோல்வி அந்த அணியின் ரசிகர்கள் மீது வெறுப்படைய காரணமாகவும் அமைந்துள்ளது. அதே நேரத்தில், ராஜஸ்தான் அணியும் அடுத்தடுத்து பல படுதோல்விகள் காரணமாக புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.