
மே 30, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று (மே 29) நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பைனலுக்கு சென்றது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (GT Vs MI) அணிகள் இன்று (மே 30) எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. PBKS Vs RCB Qualifier 1: பைனலுக்கு சென்றது ஆர்சிபி அணி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Gujarat Titans Vs Mumbai Indians):
இப்போட்டி, நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதில், தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில், தோல்வியுற்ற பஞ்சாப் அணியுடன் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடும். இவ்விரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வெற்றியும், மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:
🚨 Toss 🚨@mipaltan won the toss and elected to bat first against @gujarat_titans
Updates ▶️ https://t.co/R4RTzjQfph #TATAIPL | #GTvMI | #Eliminator | #TheLastMile pic.twitter.com/E3G3NU0FXK
— IndianPremierLeague (@IPL) May 30, 2025