ஜனவரி 12, மொஹாலி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் (Afghanistan Vs India) அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. நேற்று பஞ்சாபில் உள்ள மொஹாலியில் இருக்கும் பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகளில், இந்திய நேரப்படி இரவு 07:00 மணிக்கு முதல் டி20 (Ind Vs Afg) தொடர் நடைபெற்றது.
பவுலிங்கை தேர்வு செய்த இந்தியா: இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது, இந்த ஆட்டத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, இந்திய அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.
158 ரன்கள் குவித்த ஆப்கான் அணி: ஆப்கானிஸ்தான் அணி சார்பில் விளையாடிய முகம்மது நபி 27 பந்துகளில் 48 ரென்னும், ரஹ்மானுல்லா 28 பந்துகளில் 23 ரன்னும், இப்ராஹிம் 22 பந்துகளில் 25 ரன்னும், ஓமர்சாய் 22 பந்துகளில் 29 ரன்னும் அதிகபட்சமாக நடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களை சேகரித்தனர். இந்திய அணியும் நேற்று திறம்பட தனது பந்துவீச்சை செயல்படுத்தி இருந்தது. Femi 9 Success Meet: பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழா… விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி…
அதிரடி காட்டிய இந்தியா: மறுமுனையில், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள், 17 ஓவரில் ஆட்டத்தை நிறைவு செய்து வெற்றிவாகை சூடினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் ரோஹித் 2 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
வெளுத்து வாங்கிய சிவம்: அதனைத்தொடர்ந்து, களமிறங்கியவர்களில் சுப்னம் ஹில் 12 பந்துகளில் 23 ரன்னும், திலக் வர்மா 22 பந்துகளில் 26 ரன்னும், சிவம் டியூப் 40 பந்துகளில் 60 ரன்னும், ஜிதேஷ் ஷர்மா 20 பந்துகளில் 31 ரன்னும் அடுத்து அசத்தி இருந்தனர். இதனையடுத்து, இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் 17.3 ஓவரில், 4 விக்கெட் இழந்து தனது இலக்கை எட்டி, 159 ரன்கள் எடுத்து வெற்றிவாகை சூடியது.
அடுத்த போட்டி தேதி & நேரலையில் பார்க்க: இதனால் இந்தியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் வெற்றியை அடைந்து, ஒரு புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருக்கிறது. அடுத்த ஆட்டம் ஜனவரி 14 அன்று ஞாயிற்றுக்கிழமை மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், ஹோல்கர் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டங்களை ஜியோ சினிமா செயலியிலும், ஸ்போர்ட்ஸ் 18 & கலர்ஸ் சினி ப்ளக்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையில் காணலாம்.