India Women Vs Bangladesh Women Toss (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 26, நவி மும்பை (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup) தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 31 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 25 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அக்டோபர் 26 ஆம் தேதியான நாளை நடைபெறும் 28 வது போட்டியில் இந்திய பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும், பங்களாதேஷ் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) மோதுகிறது. இந்தப் போட்டி அக்டோபர் 26-ஆம் தேதியான இன்று நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. IND Vs AUS: பொளந்துகட்டிய ரோஹித் சர்மா & விராட் கோலி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.. இந்தியா திரில் வெற்றி..!

இந்தியா எதிர் வங்கதேசம் (India - Bangladesh Women's Cricket Match):

மகளிர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில் முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று தோல்விகளை தழுவி பின் மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் வங்கதேச அணி 6 போட்டிகளில் 1 வெற்றி 5 தோல்வி என புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தை பொறுத்தவரையில் இந்திய அணி வெற்றி பெற 93% வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா Vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs Bangladesh):

போட்டி அணிகள்: இந்தியா W Vs பங்களாதேஷ் W (India Women's Vs Bangladesh Women's Cricket)

நடைபெறும் இடம்: டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை, மகாராஷ்டிரா

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

இந்தியா பெண்கள் Vs வங்கதேச பெண்கள் அணி விபரம் (India Women Vs Bangladesh Women Squad):

இந்திய பெண்கள் அணி (India Women Vs Bangaladesh Women):

பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, உமா செத்ரி (WK), அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்

பங்களாதேஷ் பெண்கள் அணி (INDW Vs BANW Squad):

சுமையா அக்டர், ரூபியா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா ஜோட்டி (C), சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்தர், நஹிதா அக்தர், ரபேயா கான், நிஷிதா அக்தர் நிஷி, மருபா அக்தர் நிஷி