அக்டோபர் 25, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் மோதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 19 மற்றும் அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்தது. ஒரு நாள் போட்டி தொடருக்கான கோப்பையையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. India Women Vs Bangladesh Women: இந்தியா Vs பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி எப்போது?.. நேரலையில் பார்ப்பது எப்படி?.. வெற்றி யாருக்கு?
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket):
போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 41 ரன்கள் அடித்திருந்தார். டார்விஸ் ஹெட் 25 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார். மாட் ஷார்ட் 40 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்தார். மாட் ரென்ஸா 58 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்தார். அலெக்ஸ் கார்லே 37 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்தார். கூப்பர் கனொலி 34 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார். நாதன் எல்லீஸ் 19 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார். 46.4 ஓவர் முடிவில் பத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். IND Vs AUS: இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி.!
இந்திய அணி திரில் வெற்றி:
இந்நிலையில் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடரின் இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதனால் மூன்றாவது போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி அடையும் நிலை ஏற்படுமா? என்று எதிர்பார்த்த பலருக்கும் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வீரர்கள் பதிலடி வழங்கி உள்ளனர். அந்த வகையில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தியிருந்தார். சுப்மன் கில் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் இருந்த ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து இருந்தார். விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து இருந்தார். ஆட்டத்தின் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 38.3 ஓவரில் 1 விக்கெட் மட்டும் இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் 237 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என எதிர்பார்த்த போட்டியில் அசத்தல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த உத்வேகம் பிற போட்டிகளில் இருந்திருந்தால், 3 போட்டியிலும் வென்றிருக்கலாம்.
அதிரடி காட்டிய ஹிட்மேன்:
Hitman has RO-ared with all class in Sydney! 💯
👉 His 33rd ODI century, 50th across formats
👉 9 - Joint-most 100s in ODIs against AUS
👉 6- Most 100s by a visiting batter in ODIs in AUS#AUSvIND 👉 3rd ODI | LIVE NOW 👉 https://t.co/0evPIuANAu pic.twitter.com/r5AtoC6u1i
— Star Sports (@StarSportsIndia) October 25, 2025