IND Vs BAN Women ODI 2023 (Photo Credit: Twitter)

ஜூலை 22 , ஷேர்-இ-பங்களா (Sher E Bangla): வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி, வங்கதேச அணியுடன் ஒருநாள் போட்டியில் இன்று மோதியது. 50 ஓவர்கள் கொண்ட போட்டியில், இன்று இந்திய அணி வங்கதேச பெண்கள் அணியை எதிர்கொண்டது.

போட்டியின் தொடக்கத்தில் டாஸை வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. பர்கானா 160 பந்துகளில் 107 ரன்களை குவித்து அசத்தினார். சாமியா 78 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.

50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்த வங்கதேச அணியினர் 225 ரன்களை குவித்திருந்தனர். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பல வீரர்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணி இறுதியில் தனது விக்கெட்டுகளை இழந்தது. Andhra Police: தமிழ்நாட்டு குறவர் பெண்களிடம் ஆந்திர காவல்துறை உச்சகட்ட மனித உரிமை மீறல்; நெஞ்சை பதறவைக்கும் பெண்ணின் கண்ணீர்.!

இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஹெர்லீன் 108 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். ஸ்ம்ரிதி 85 பந்துகளில் 59 ரன்களை எடுத்திருந்தார். ஜெமியா 45 பந்துகளில் 33 ரன்களை எடுத்திருந்தார். ஹரம்ப்ரீத் 14 ரன்களும் எடுத்திருந்தார். பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இந்திய பெண்கள் அணி 225 ரன்கள் என்ற இலக்கில் 225 ரன்களை மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓவரை முடித்தது.

இதனால் 3 போட்டிகளை எதிர்கொண்ட இந்திய - வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் 1-1 என இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றுள்ளன.