Sexual Abuse | Andhra Pradesh Logo (Photo Credit: Pixabay / Wikipedia)

ஜூலை 22, சென்னை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, மாத்தூர் பகுதியில் புலியாண்டிபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் கூட்டுரோடு பகுதியில் குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் குறவர் இன மக்களான பூமதி (வயது 24), பிரியா (வயது 27), ரேணுகா (வயது 34), சத்யா (வயது 45), கண்ணம்மாள் (வயது 65) ஆகிய 5 பெண்கள், ஐயப்பன் (வயது 40), தமிழரசன் (வயது 20), ரமேஷ் (வயது 53) ஆகிய 3 ஆண்கள், ஸ்ரீதர் (வயது 7), ராகுல் (வயது 5) ஆகிய 2 குழந்தைகள் என மொத்தமாக 10 பெற ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்களை ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் 20 பேர் கைது செய்து இருக்கின்றனர். எதற்காக தங்களை கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். திருட்டு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தும், பெண்களையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்திய அதிகாரிகள் ஜாதி ரீதியாக பேசி அவமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பூந்தல்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் கூறும் கடையில் 4 கிலோ தங்க நகைகளை வாங்கி, தங்களின் கணவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மிரட்டி சித்ரவதை செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி தாக்குதல் தொடர்ந்துள்ளது.

இவ்விவகாரத்திற்கு சம்மதம் தெரிவிக்காத பூமத்தி மற்றும் பிரியா ஆகியோரின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டு, கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மிளகாய்பொடியை அவர்களின் உடல் முழுவதும் தூவி, பிறப்புறுப்பு பகுதியில் திணித்து உச்சகட்ட மனித உரிமை மீறலையும் ஆந்திர காவல்துறையினர் குறவர் இன மக்களுக்கு எதிராக நிகழ்த்தியுள்ளனர். 7 பேர் கொண்ட அதிகாரிகள் கும்பலால் இருவரும் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளனர். Avaraikai Benefits: உடல் முதல் உள்ளுறுப்புகள் வரை பலத்தை தரும் அவரைக்காய்; அசத்தல் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.!

இந்த விஷயம் குறித்து பூமதி மற்றும் பிரியா பேசுகையில், "தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் கண்காணிப்பாளர் பார்த்தீபனுக்கு தகவல் தெரிவித்தோம். அவருக்கு தெரிந்தே ஆந்திர பிரதேச அதிகாரிகள் எங்களை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த துயரம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்ததும் பலனில்லாததால், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம்.

நாங்கள் குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் இரவு நேரத்தில் பெண்களை விசாரணைக்கு என அழைத்து தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த குற்றம் தொடருகிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலையிட்டு, பொய்யான வழக்கில் இருந்து எங்களின் குடும்பத்தினரை காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்களை கண்டிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த தகவல் வெளியுலகுக்கு தெரியவந்து பெரும் அதிர்வலைகளை பதிவு செய்துள்ளன. எல்லைப்பகுதியில் இருக்கும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களை குறிவைத்து, அண்டை மாநில காவல்துறை முன்னெடுத்துள்ள மனித உரிமை மீறல் பெரும் கண்டனத்தை குவித்து வருகிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

சாதிதான் சமூகம் எனில் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்றார் அம்பேத்கர். அவரின் புகைப்படத்தை சட்டத்திற்கு சாட்சியாக காவல் நிலையத்தில் மாட்டி வைத்து, அங்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களின் மீது, சாதிய பாகுபாடை காண்பித்து நடந்த கொடூரம் நெஞ்சை பதறவைக்கிறது.