மார்ச் 04, தர்மசாலா (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த 5 டெஸ்ட் தொடர்களில் 4 ஆட்டங்கள் (IND Vs ENG Test Series 2024) நடைபெற்று முடிந்துவிட்டன. இவற்றில் முதல் ஆட்டம் தவிர்த்து, எஞ்சிய 3 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று, 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கிறது. மேலும், நடப்பு தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. ஒரு ஆட்டத்தில் மட்டும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, இறுதியாக மரியாதை நிமித்தமான வெற்றிபெற்று இந்திய மண்ணில் இருந்து வெளியேறுமா? அல்லது படுதோல்வியுடன் தனது நாட்டிற்கு பயணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வானிலை மாற்றத்தால் போட்டி தள்ளிப்போகும் / ரத்தாகும் வாய்ப்பு: இந்த தொடரின் இறுதி மற்றும் ஐந்தாவது ஆட்டம், ஹரியானா மாநிலத்தில் உள்ள தர்மசாலா நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. போட்டியை எதிர்பார்த்து இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இறுதிப்போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறியை வானிலை நிலவரம் உண்டாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மின்னலுடன் கூடிய திடீர் மழை, பனிப்பொழிவு ஆகியவை நிலவி வருகிறது. மழை நகரின் வெப்பத்தை தணிதலும், ராஜஸ்தானில் மின்னல் தாக்குதல் மக்களின் உயிரையும் பறித்து வருகிறது. Leopard Stuck Into Vessel: எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்திங்களா ஆண்டவரே.. பாத்திரத்தில் சிக்கித்தவித்த சிறுத்தை..!
ஆட்டத்தை பாதிக்கலாம்? இந்நிலையில், தர்மசாலாவில் நிகழும் மழை, பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை என்பது கிடுகிடுவென குறைந்து 10 டிகிரி செல்ஸியஸ் அளவில் நிலவுகிறது. இதனால் மார்ச் 07ம் தேதி திட்டமிட்டபடி போட்டி தொடங்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தை வெண்பனி கம்பளி போத்தினார் போல ஆடிக்கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. போட்டி தொடங்கும் நாளில் இதே நிலவரம் தொடர்ந்தால், அது இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஆட்டத்தை நேரடியாக பாதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது எனினும், இறுதி போட்டி எப்போதும் விறுவிறுப்புடன் இந்திய மண்ணில் நடைபெறும் என்பதால், வானிலை காரணமாக ரசிகர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். Actress Arrested by Theft Case: திருட்டு வழக்கில் பிரபல நடிகை அதிரடி கைது; தோழி போல பழகி வீடுகுபுகுந்து துணிகரம்..!
இந்திய சிங்கங்கள்: இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், தேவ்தத் பாடிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இங்கிலாந்து அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட்சன் , மார்க் வூட் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இப்போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
ரசிகரின் பதிவு:
Dharamshala covered by snow.
Fifth test match is going to be remarkable. Absolutely thrilling.
🇮🇳🏴 pic.twitter.com/Ooz87Qx9si
— Hemang (@hemangxx) February 28, 2024
வானிலை காரணமாக கேள்விக்குறியாகும் போட்டி:
This is going to be quite a Test match in Dharamshala. Snow, low temperatures, rain, fog, sleet and maybe a thunderstorm. I don't recall a test match that was played in such conditions.
An all pace attack might be the one to go for!
This is going to be a fitting… pic.twitter.com/RzHaoZn55M
— Rishi Gupta (@rishigupta529) March 3, 2024