செப்டம்பர் 28, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan Cricket) இரண்டு அணிகளும் சரிசமமான செயல்பாடுகளுடன் மோதியதால் ஆட்டம் சுவாரஷியத்துடன் நகர்ந்து வந்தது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முதல் பேட்டிங் 10 ஓவர்களில் அசத்தலாக இருந்தாலும், பின் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தனது சுழற்பந்து திறனை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சஜிபஷடா பர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். பாக்கர் ஜமன் அரை சதத்தை நெருங்கினார். India Vs Pakistan: பேட்டிங், பந்துவீச்சில் தெறி சம்பவம்.. சரிசமமான போட்டி.. ஆசியக்கோப்பை 2025 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அசத்தல் ஆட்டம்..!
இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியில், இந்திய தேசிய கிரிக்கெட் அணி தடுமாற்றத்துடன் பேட்டிங் (India Vs Pakistan Cricket Match Asia Cup 2025):
19.1 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 146 ரன்கள் குவித்தது. அசத்தல் ஆட்டம், அடுத்தடுத்த விக்கெட் இழப்பு என தடுமாறினாலும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் கவனமாக இருந்தனர். தொடர்ந்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டை இழந்தது ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக சூரியகுமார் யாதவ், அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் ஹில் ஆகியோர் விக்கெட்டை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 10 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது. ஆனால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) ரன்களை உயர்த்தினர்.
ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி போராடி வெற்றி (Asia Cup 2025 India Vs Pakistan Final 2025):
சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட்டாகினார். தொடர்ந்து, திலக் வர்மா, சிவம் டியூப் நின்று ஆடினர். குறிப்பாக அவர் 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிவம் டியூப் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. 19வது ஓவரில் சிவம் விக்கெட் இழந்தது. எஞ்சியுள்ள 6 பந்துகளில் திலக் வர்மாவும், ரிங்கு சிங்கும் களத்தில் இருந்தனர். 5 பந்துகளில் 5 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. திலக் வர்மா சிக்ஸ், போர் என வெற்றிக்கு வழிவகை செய்தார். ரிங்கு சிங் இறுதியாக 1 பந்தில் 4 ரன்கள் அடித்தார். இதனால் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. இந்திய அணியின் வெற்றி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆசியக்கோப்பை 2025ஐ இந்தியா வென்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் டாஸ் (Ind Vs Pak Toss Update):
Opposition ki hogi dandi gul jab #TeamIndia machayenge tabahi with their lethal bowling attack! 🤘
Watch #INDvPAK in the #DPWORLDASIACUP2025 Final - LIVE on #SonyLIV & #SonySportsNetwork TV Channels 📺 pic.twitter.com/UzCNdP5A4G
— Sony LIV (@SonyLIV) September 28, 2025
சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்:
Dismissed out of his sight by Samson 🔥👋
Watch #DPWORLDASIACUP2025 - LIVE on #SonyLIV & #SonySportsNetwork TV Channels 📺#AsiaCup #INDvPAK pic.twitter.com/nLkB5r7GOV
— Sony LIV (@SonyLIV) September 28, 2025