Vinesh Phogat (Photo Credit: @werindia X)

ஆகஸ்ட் 20, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics 2024) போட்டிகள் கடந்த 26 ஜூலை அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற்றது. உலகளவில் 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளாக நடைபெற்ற ஆட்டங்களில் கலந்துகொண்டனர். நாடுகள் வாரியாக அமெரிக்கா (America USA) 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா (China) 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

100 கிராம் எடையால் பறிபோன கனவு:

இந்தியா சார்பில் களம்கண்ட 120 பேரில் துப்பாக்கிசூடுதல், ஈட்டி எறிதல், ஹாக்கி, மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் வெண்கலம், வெள்ளி பதக்கங்கள் கிடைத்தது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat), இறுதியில் 50 கிலோ எடை பிரிவில் 100 கிராம் எடை அதிகம் இருந்த காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. Melbourne Match in 2027: டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 150 ஆண்டு நிறைவு.. 2027-ல் மெல்பர்னில் சிறப்பு போட்டி..! 

நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்:

தகுதிநீக்கத்துக்கு பின்னர் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ், சமீபத்தில் தாயகம் திரும்பி இருந்தார். அவருக்கு பதக்கம் பெற்றவருக்கான மரியாதை மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனிடையே, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்தும் நடுவர் நீதிமன்றத்தில், வினேஷ் போகத் தான் இறுதிப்போட்டிவரை தேர்வான காரணத்தால், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

சலுகை வழங்க முடியாது:

இந்த மனுவுக்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் பதில் அளித்தபோது, விளையாட்டுப்போட்டிகளில் உரிய விதிமுறைகள் இருப்பதால், இவ்வாறான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விதிகள் அனைவருக்கும் பொதுவானது. ஒருவருக்காக விதிகளை தளர்த்தி சலுகை வழங்கினால் அது நல்லது இல்லை என தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணையும் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து, கடந்த ஆகஸ்ட் 13 அன்று நிறைவு பெற்றது.

விதிகள் மாற்றம் செய்யப்படாது:

இந்நிலையில், இன்று வினேஷ் போகத்தின் கோரிக்கை மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன் வாயிலாக வினேஷ் போகத்தின் கோரிக்கை நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் "விண்ணப்பதாரரின் எடை 2 முறை சோதனையின்போதும் 50 கிலோவை கடந்து இருந்துள்ளது. வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிகள் என்பது பொதுவானவை. அவை அனைத்தும் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப வீரர் தன்னை தயார் செய்து களம்காண்கிறார். இறுதிக்கட்டத்தில் அவரின் எடை அதிகரித்துவிட்டது என்பதற்காக, விதிகளை மாற்ற முடியாது. அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் உள்ள விதிமுறை உண்டு என்பதால், அதில் தளர்வு செய்து தங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.