நவம்பர் 02, மும்பை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-2 என தொடரை இழந்து இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி (IND Vs NZ 3rd Test, Day 2) நேற்று மும்பையில் (Mumbai) தொடங்கியது. இந்தியா இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கும் அவசியமானதாகும். Virat Kohli On RCB: "ஆர்சிபி அணி ரொம்ப ஸ்பெஷல்".. அடுத்த 3 வருடத்தில் ஒரு முறையாவது கோப்பையை வெல்வதே இலக்கு.., விராட் கோலி அறிவிப்பு..!
இதில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில், 2ஆம் நாள் இன்று தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த கில் மற்றும் பண்ட் இருவரும் அரைசதம் கடந்தனர். ரிஷப் பண்ட் (Rishabh Pant) 59 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா (Ravindra Jadeja) சற்று நிதானமாக விளையாடி வருகிறார்.
மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 43 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 195 ரன்கள் அடித்துள்ளது. சுப்மன் கில் (Shubman Gill) 70 ரன்னிலும், ஜடேஜா 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 2, மேட் ஹென்றி மற்றும் சோதி தலா 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்தியா இன்னும் 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ரிஷப் பண்ட் அதிரடி அரைசதம்:
𝐏𝐚𝐧𝐭 𝐦𝐚𝐚𝐫 𝐫𝐚𝐡𝐚 𝐡𝐚𝐢 🔥#INDvNZ #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports #RishabhPant pic.twitter.com/Rf9qhP76PF
— JioCinema (@JioCinema) November 2, 2024