INDW Vs PAKW ICC Women's Cricket Cup 2025 (Photo Credit: @BCCIWomen X)

அக்டோபர் 05, கொழும்பு (Cricket News Tamil): இலங்கையின் கொழும்புவில் இன்று இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி மாலை 3 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் பாகிஸ்தானின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு அணியின் ரன்களை உயர்த்த போராடி இருந்தனர். பாகிஸ்தான் அணியினரும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர். Pakistan Skipper Fatima Sana Uses Bug Spray: ஈக்களை சமாளிக்க ஸ்ப்ரே.. இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் போட்டியில் பாக்., ஸ்கிப்பர் பாத்திமா சனா செயல்.. வைரலாகும் வீடியோ.! 

இந்தியா எதிர் பாகிஸ்தான் கிரிக்கெட் (INDW Vs PAKW Cricket):

இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் முதலில் பேட்டிங் செய்த பிரதிகா ராவல் (Pratika Rawal) 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 32 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்லீன் டியோல் (Harleen Deol) 65 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 34 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். ஜெமியா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்நேஹ் ராணா (Sneh Rana) 32 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். தீப்தி ஷர்மா (Deepti Sharma) 29 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். ரிச்சா கோஷ் (Richa Ghosh) 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

ஹர்லீன் டியோலின் அதிரடி சம்பவங்கள்:

ஸ்நேஹ ராணா மாஸ் காட்டிய தருணம்: