பிப்ரவரி 24, ஜார்கண்ட் (Cricket News): இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரில், இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG Test Matches) அணிகள் மோதிக்கொள்கின்றன. தற்போது வரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், எஞ்சிய 2 ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி அடைந்துள்ளது. நேற்று முதல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜெ.எஸ்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய நான்காவது தொடரின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. Coimbatore Shocker: திருமணமான ஒரே மாதத்தில் விரிசல்; தாய்-தந்தை, மகள் என கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு குடும்பமே தற்கொலை.!
இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவிப்பு: நேற்றைய ஆட்டத்தின் உணவு இடைவெளிக்கு முன்பே 5 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி, போட்டியின் இரண்டாம் நாளில் 11 மணிக்குள் தனது மொத்த விக்கெட்டையும் பறிகொடுத்தது. அந்த அணி 104.5 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. ஜோ 274 பந்துகளில் 122 ரன்கள் அடித்திருந்தார். ஜாக் 42 பந்துகளில் 42 ரன்னும், ஜானி 38 பந்துகளில் 35 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 126 பந்துகளில் 47 ரன்னும், ஒல்லி 96 பந்துகளில் 58 ரன்னும் அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். Stray Bull Attack Death: 43 வயது நபரை முட்டித்தூக்கி, கொடுரமாக தாக்கி கொலை செய்த காளை; பொய்த்துப்போன உயிர்காப்பு முயற்சிகள்.!
களமிறங்கிய இந்திய சிங்கங்கள்: இதனையடுத்து, தற்போது இந்திய அணியின் வீரர்கள் ரன்களை குவிக்கும் எண்ணத்துடன் களமிறங்கி இருக்கின்றனர். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் முன்னிலை பெற்று நடப்பு தொடரை கைப்பற்றும். இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றால், அடுத்த ஆட்டம் இரண்டு அணிக்கும் வெற்றியை தேடித்தரும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் நேரிலும், ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி (Sports 18) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் கண்டுகளித்து வருகின்றனர்.
விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித்: ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்திய அணியின் சார்பில் ஜெய்ஷ்வால் - ரோஹித் சர்மா ஜோடி களமிறங்க, ரோஹித் ஜேம்ஸ் வீசிய பந்தை தூக்கி அடித்து பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.